பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


பஞ்ச தந்திரக் கதைகள்
பகுதி 5
ஆராயாத செயல் தவிர்த்தல்
1. கீரிப் பிள்ளையைக் கொன்றான்

ஓர் ஊரில் ஒரு பார்ப்பனன் இருந்தான். அவன் அந்த நாட்டு அரசனுக்குப் பஞ்சாங்கம் சொல்லும் வேலை பார்த்து வந்தான். அவன் மனைவிக்கு நெடுநாளாகப் பிள்ளை பிறக்கவில்லை. அதனால் அவர்கள் ஒரு கீரிப்பிள்ளையை ஆசையோடு எடுத்து வளர்த்து வந்தார்கள்.

அந்தப் பார்ப்பனன் தன் பிள்ளையாசை முழு வதையும் அந்தக் கீரிப் பிள்ளையின் மேல்வைத் திருந்தான். அதை அன்போடு எடுத்து மடியின் மேல் வைத்துக் கொள்வான். மார்பில் சேர்த்து வைத்துத் தழுவிக் கொள்வான். முத்தம் இடுவான். பாலும் சோறும் தன் கையாலேயே ஊட்டுவான். தன் மார்பின் மேல் போட்டுத் தூங்கவைப்பான். இப்படி