பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொசிமாக் குடத்திலே இழந்த போகம்

201

பிராமணர்களெல்லாம் தாங்களாகவே வந்து பெண் கொடுப்பதாகச் சொல்வார்கள். அந்தப் பெண்களில் அழகான ஒருத்தியைக் கன்னிகாதானமாகப் பெற்று அவளோடு மன்மதனும் ரதியும் போல் அன்பாக இருந்து இன்பம் காண்போம். ஒரு நல்ல பிள்ளையைப் பெற்று அதற்குச் சோமசன்மா என்று பெயர் வைப்போம். இப்படி நாம் இன்பமாக வாழும் நாளில் மேயப் போன பசுக்கள் மாலையில் வீட்டுக்குத் திரும்பி வரும், பெற்ற பிள்ளையைக் கீழே வைத்து விட்டு மாடு கட்டப் போவாள் மனைவி. தாய்போனவுடன் பிள்ளை அழும். நாம் ஓடிப்பேர்ய்ப் பிள்ளையை ஏன் அழவைத்து விட்டு வந்து விட்டாய் என்று கோபித்துக் கொண்டு அவள் முதுகில் இப்படி அடிப்போம் என்று சொல்லிக் கொண்டே பக்கத்தில் இருந்த தடியை எடுத்து எதிரிலிருந்த பொரிமாக் குடத்தில் அடித்தான். அது மண் குடமாயிருந்த படியால் நொறுங்கி மாவெல்லாம் மண்ணோடு மண்ணாகக் கலந்து விட்டது.

பொரிமக் குடத்தோடு எல்லாம் போய் விட்டதே என்று வருந்திக் கண்ணிர் வடித்து வயிற்றில் அடித்துக் கொண்டு பைத்தியம் பிடித்தவன் போல் தரையில் புரண்டான் அந்த இளைஞன்.

ஆகையால் எதையும் காரியத்தில் பார்க்கும் முன்னே கற்பனையை வளர்க்கக் கூடாது.

ப-13