பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆயிரம் பொன்னுக்கு விற்ற பாட்டு

205


கொதிப்பு அடங்கும் என்று நினைத்தான். ஆகவே, ஒரு பாறாங்கல்லைத் தூக்கிக் கொண்டு, யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் நுழைந்து, தன் தந்தை படுக்கும் இடத்திற்கு நேராக மேலேயுள்ள பரணில் ஏறி ஒளிந்து கொண்டான்.

வெளியில் சென்றிருந்த வேதியன் பொழுது சாயும் நேரம் வீடு வந்து சேர்ந்தான். சாப்பாடெல்லாம் முடிந்துக் கொண்டு, தன் படுக்கையில் வந்துஉட்கார்ந்தான். அவன் மனைவியும் அங்கு வந்தாள்.

'ஏண்டி நம் பிள்ளையாண்டான் எங்கே காணோம்?’ என்று கேட்டான் வேதியன்.

அவள் கண்ணிருடன் அழுது கொண்டே ‘என்னாங்க, வயது வந்த பிள்ளையை இப்படித்தான் அடிக்கடி கோபித்துக் கொள்வதா? அவன் என்ன சாத்திரம் படிக்கவில்லையா? சதுர்மறை யோத வில்லையா? எல்லாவற்றிலும் கெட்டிக் காரனான அவன் மேல் ஏன் இப்படி எரிந்து எரிந்து விழுந்தீர்கள்? இப்போது அவன் கோபித்துக் கொண்டு அயல் நாடு சென்று விட்டான்! எங்கே போய் எப்படிக் கஷ்டப்படப் போகிறானோ?’ என்று வருத்தத்துடன் கூறினாள்.

'அடியே, நீ என்ன புரியாமல் அழுகிறாய்! நம் பிள்ளையைப் பற்றி எனக்குத் தெரியாதோ? நாமே புகழ்ந்து சொன்னால் அவனுக்கு ஆங்காரம்