பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தலையில் சுழன்ற சக்கரம்

211

நல்லபாட்டுச் சீட்டினால் இவன் பிழைத்தான்? என்று குறிப்பிட்டு, தன் மகனை நோக்கி, 'இந்தச் சீட்டு உனக்கு எப்படிக் கிடைத்தது?’ என்று கேட்டான்.

‘சிறு வயதில் தாங்கள் வெளி நாட்டுக்குப் புறப் பட்டுப் போகும் போது, அரிய பொருள்களை ஆயிரம் பொன் கொடுத்தேனும் வாங்கிவிட வேண்டுமென்று சொன்ன நீதி என்னுள்ளத்தில் பதிந்திருந்தது, அதனால்தான் அந்தப் பாட்டுச் சீட்டை ஆயிரம் பொன் கொடுத்து வாங்கினேன்'என்றான்.

'நல்ல காரியம் செய்தாய்! கோடிப்பொன்னுக்குச் சமமான உன்னை நான் இழவாமல் செய்தது அந்தச் சீட்டு’ என்று அவனைத் தழுவிக் கொண்டான் வணிகன், அவர்கள் பல நாட்கள் அன்பாகவும் இன்பமாகவும் வாழ்ந்தார்கள்.


5. தலையில் சுழன்ற சக்கரம்

ஓர் ஊரில் நான்கு பேர் இருந்தார்கள். அந்த நான்கு பேரும் வறுமையினால் வாடினார்கள். தங்கள் வறுமையைத் தீர்த்துக் கொள்வதற்காக ஒரு யோகியை நாடிச் சென்றார்கள். அவர்கள் குறையைக் கேட்ட அந்த யோகி தமது சித்தியினால் அவர்களுக்குப் பொருள் கிடைக்கும் வழி ஒன்றைச் சொன்னார். அவர்கள் ஒவ்வொருவர் தலை மீதும் ஒவ்வொரு திரிச் சீலையை வைத்துக் கீழ்க் கண்டவாறு சொன்னார்.