பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/218

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

பஞ்ச தந்திரக் கதைகள்


யில் மிகத் தேர்ச்சியடைந்தார்கள். நான்காமவன் சரியாகக் கல்வி பயிலவில்லை. மற்ற மூவரும் அரசனிடம் தங்கள் திறமையைக் காட்டிப் பொருள் பெறுவதற்காகச் சென்றார்கள் அப்போதுகல்வித்நோச்சியில்லாதவனாக இருந்தரலும், தங்களுடன் படித்தான்என்பதற்காக நான்காமவனையும் தங்க ளுடன் அழைத்துச் சென்றார்கள். தங்கள் வருவாயில் ஒரு பங்கு தருவதாகப் பேசிக் கொண்டு கூட்டிச் சென்றார்கள்.

அவர்கள் போகும் வழியில் ஒரு சிங்கம் செத்துப் பிணமாகிக் கிடந்தது. 'நாம் கற்ற வித்தையைப் பரிசோதித்துப் பார்க்க இது ஓர் அரிய வாய்ப்பு, நாம் மந்திரவித்தையால் இந்தச் சிங்கத்தைப் பிழைத் தெழச் செய்வோம்’ என்றான் ஒருவன். அப்போது கல்லாதவன், 'சிங்கத்தை எழுப்பினால் அது நம்மைக் கொன்று விடும்!’ என்று கூறினான். மற்றவர்கள்,