இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
220
பஞ்ச தந்திரக் கதைகள்
'சரி, நாளை வருகிறேன், என்று கூறிவிட்டு நெசவாளி வந்து விட்டான். அன்றே தன் நண்பனான நாவிதன் ஒருவனை என்ன வரம் கேட்கலாம்?’ என்று யோசனை கேட்டான். நீ ஓர் அரசனாக வரம் கேள். நான் உன் மந்திரியாக வந்து விடுகிறேன்’ என்றான் நாவிதன். அன்று இரவு தன் மனைவியிடம் இதைப் பற்றிச் சொன்னான்.
'அரசனாக வந்தால் துன்பம் அதிகம். அதெல்லாம் நமக்கு வேண்டாம். இன்னும் ஒரு தலையும் இரண்டு கைகளும் பெற்றால் தினம் இரண்டு தறியில் நெய்து அதிகப் பணம் சேர்க்கலாம்? என்று யோசனை கூறினாள், அவன் மனைவி.
நெசவாளியும் இதையே நல்ல யோசனை குயன்று தெர்ந்தேடுத்துக் கொண்டான்.