பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எருதும் சிங்கமும்

31
கடலும் மலையும் அதிர, அவை ஒன்றொடொன்று மோதிப் போரிட்ட காட்சி பார்க்கப் பயங்கரமாயிருந்தது. இரண்டு நரிகளும் இந்தப் பயங்கரமான காட்சியை ஒரு புதர் மறைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்தன. காரணமில்லாமல் அவையிரண்டும் ஒன்றையொன்று உதைப்பதும் மோதுவதும் அறைவதும் கண்ட இரண்டாவது நரிக்கு மனம் பொறுக்கவில்லை.

பஞ்ச தந்திரக் கதைகள்.pdf

அது, முதல் , நரியைப் பார்த்து, 'போதும், அரசர்க்குத் துன்பம் உண்டாக்குவது தெய்வத் துரோகம் அல்லவா? சண்டையை விலக்கி மீண்டும் நட்பை உண்டாக்கி விடுவதுதான் சரி.

'உண்மை யில்லாமல் புண்ணியம் தேடுவோரும், உறவினர்களைக் கெடுத்துச் செல்வம் சேர்ப்போரும்,