பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

பஞ்ச தந்திரக் கதைகள்

பலாத்காரத்தினால் பெண்களை அடைவோரும், உயிருக்குயிரான இருவரைக் கெடுத்துத் தாம் வாழ நினைப்போரும் உலகில் இன்பமடைய மாட்டார்கள். துட்ட புத்தி கெட்டதைப் போலவும், இரும்பை எலி தின்ற தென்ற செட்டியைப் போலவும் துன்பமடை வார்கள். ஆகவே, நீ இப்போதே போய் அவர்கள் சண்டையை விலக்கி விடு' என்று பலவாறாக எடுத்துச் சொல்லியது.

இதைக் கேட்ட முதல் நரி ஒருவாறாக மனம் தேறிச் சிங்கத்தை நோக்கிச் சென்றது. அதற்குள் சிங்கம் எருதைக் கொன்று விட்டது.

செத்துக் கிடந்த மாட்டைக் கண்டு சிங்கம் கண்ணிர் விட்டுப் புலம்பிக் கொண்டிருந்தது,

அருகில் சென்ற முதல் நரி, சிங்கத்தைப் பார்த்து, 'சண்டைக்கு வந்தவனைத்தானே கொன்றீகள்? இதற்கு ஏன் அழ வேண்டும் அரசே?' என்று கேட்டது. .

ஒரு நன்மையும் தராத நச்சு மரமானாலும், நாம் வளர்த்ததை நாமே வெட்டுவதென்றால் உளம் பொறுக்குமோ, உலகம் புகழும் ஓர் அமைச்சனைக் கொல்லுகின்ற அரசனுக்குப் பெரும் கேடு வராதா?’ என்று கூறிச் சிங்கம் வருந்தியது.

‘அரசே, கடமைப்படி நடவாதவர்களையும், தன் சொல் கேளாத மனைவியையும், மனத்தில் கபடம்