பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கரும்பாம்பைக் கொன்ற காகம்

39


பட்டு மோதுண்டு உயிரை இழந்தது. இந்த வேடிக்கையைப் பார்த்துக் கொண்டே சாமியார் தேவசன்மா தன்னை மறந்து நின்று கொண்டிருந்தான்.

இந்த வேளை போனால் இன்னொரு வேளை வாய்க்காது என்று எண்ணிய ஆஷாடபூதி அப்போதே, சமியாரின் கந்தை முடிப்பை எடுத்துக் கொண்டு ஓடி விட்டான். காட்டுக்குள் எங்கோ சென்று மறைந்து விட்டான். திரும்பி வந்த சாமியார் தன் சீடனைக் காணாமல் மனம் வருந்தினான். அவனைத் தேடிக் கொண்டு ஊர் ஊராக அலைந்தான்.

அலைந்ததுதான் மிச்சம். கடைசிவரை அவன் ஆஷாடபூதியைக் கண்டு பிடிக்கவில்லை.

அறிவின்மையால் தேவசன்மா தன் கைப்பொருளை இழந்தான். யோசனையில்லாமல் ஆட்டுக்கடாப் போரில் நடுவில் சென்று மாட்டிக் கொண்டு நரி உயிரிழந்தது.

இதுதான் தங்களுக்குத் தாங்களே கேடு செய்து கொண்ட கதை.


5. கரும்பாம்பைக் கொன்ற காகம்

ஒரு மரக் கிளையில் ஆணும் பெண்ணுமாக இரண்டு காகங்கள் கூடு கட்டிக் கொண்டு வாழ்ந்து வந்தன. அந்தக் காகங்கள் அம்மரக் கிளையில் நெடு நாளாகத் தங்கியிருந்து வந்தன. அந்த மரத்தில்