பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

பஞ்ச தந்திரக் கதைகள்

‘இது சூது!’ என்று தெரிந்து கொண்ட நல்ல புத்தி, மரத்தில் ஏறி அந்தப் பொந்தில் நெருப்பை மூட்டினான்.

நெருப்பின் சூடு தாங்காமல், கெட்டபுத்தியின் தந்தை மரப்பொந்தின் உள்ளிருந்தபடியே' கெட்ட புத்தி, உன்னால் கெட்டேன்!’ என்று பதைபதைத்துக் கதறினான். நெருப்பில் வெதும்பி இறந்து போனான்.

இதைக் கண்ட ஊர் வழக்காளர் அரசரிடம் போய் நிகழ்ந்ததைக் கூறினார்.

பொன் முழுவதையும் நல்லபுத்திக்குக் கொடுக்கும்படி சொல்லி, கெட்டபுத்தியை அரசர் சித்திரவதை செய்து கொல்லும்படி உத்தர விட்டார்.

பிறரைக் கெடுக்க நினைப்பவர்கள் தாங்களே கெட்டொழிவார்கள். 

15. கொக்கு முட்டை தின்ற பாம்பு

ஒரு கொக்கு இருந்தது. அது இடுகிற முட்டைகளை யெல்லாம் ஒரு நாகப் பாம்பு தெரியாமல் வந்து தின்று கொண்டிருந்தது. என்ன செய்வதென்று தெரியாத கொக்கு, தனக்குத் தெரிந்த நண்டு ஒன்றிடம் போய் என்ன செய்யலாம் என்று கேட்டது. அது ஓர் அருமையான வழி சொல்லிக்