பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

பஞ்ச தந்திரக் கதைகள்

இருந்தார்கள். அவர்களில் ஒருவன், அயல் நாடு போக வேண்டி யிருந்ததால், தன்னிடம் உள்ள ஆயிரம் துலாம் இரும்பையும், தன் நண்பனிடம் பாதுகாப்பாக வைத்துவிட்டு வெளிநாட்டுக்குப் போய்விட்டான்.

வெளிநாடு சென்றவன் திரும்பி வந்து கேட்ட போது, 'இரும்பை யெல்லாம் எலி தின்று விட்டது' என்று நண்பன் கூறி விட்டான்.' சரி, போனால் போகிறது!’ என்று சொல்லிவிட்டு, மீண்டும் அவன் முன்போல நண்பனாகவே இருந்து வந்தான்.

பிறகு ஒரு முறை அந்த நண்பனுடைய வீட்டில் ஒரு விருந்து நடந்தது. விருந்துக்கு அந்த வெளிநாடு சென்று வந்த வணிகன், தன் நண்பனுடைய வீட்டில் எண்ணெய் தேய்த்துக் கொண்டான். நண்பனுடைய பிள்ளைக்கும் எண்ணெய் தேய்த்து விட்டான். பிறகு அந்தப் பிள்ளையையும் கூட்டிக் கொண்டு குளத்திற்கு குளிக்கச் சென்றான். குளித்த பின், அந்தப் பிள்ளையைத் தகுந்த ஓரிடத்தில் ஒளித்து வைத்து விட்டுத் தான் மட்டும் திரும்பி வந்தான்.

வீட்டுக்குத் திரும்பி வந்து சேர்ந்த வணிகனைப் பார்த்து, அவனுடைய நண்பன் 'என் பிள்ளை எங்கே?’ என்று கேட்டான். :உன் பிள்ளையைப் பருந்து தூக்கிக் கொண்டு போய் விட்டது!' என்றான் வணிகன். உடனே மற்ற வணிகனுக்குக்