பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8


பள்ளியிவிருந்து வீடு திரும்பிய அழகப்பன் வீடு நிறையக் கூட்டம் கூடி இருப்பதையும்; பெற்றோர் இருவரும் இறந்து கிடப்பதையும் கண்டு கதறி அழுதான்.

அதன் பிறகு காரியங்கள் வேகமாக நடந்தேறின. சில நாட்கள் சென்னையில் இருந்து அவனது தந்தைக்குச் சேர வேண்டிய கம்பெனி பணத்தையெல்லாம் அவனது மாமாப் பெற்றுக் கொண்டு, அழகப்பனையும் தன்னோடு கிராமத்திற்கு அழைத்து வந்து விட்டார்.

பெற்றோரை இளமையில் இழந்த துயரம் அவன் உள்ளத்தில் ஆறாத வடுவாக ஒரு ஓரத்தில் இருந்தாலும்; தனது பள்ளிப் படிப்பு முடங்கி விட்டது தான் அவன் உள்ளத்தில் பெரும் துயரமாக மூண்டு இருந்தது.

ஆரம்பத்தில் அந்தக் கிராமத்து சூழ்நிலையும்; அவனை ஒத்த பையன்களுடன் ஓடி ஆடி விளையாடுவதிலும் சிறிது இன்பமிருப்பதாகத் தோன்றினாலும்; அவன் மனம் எல்லாம் சென்னையில் அவன் படித்த பள்ளியையும்; படிப்பில் சிறந்து விளங்கிய தன் நண்பர்களையுமே எண்ணி ஏங்கியது.

அழகப்பனின் மாமாவோ; அவனது தந்தை மூலம் வந்த ஏராளமான பணத்தையெல்லாம், அழகப்பனுக்காக நிலம், வீடு, என்று வாங்கிச்