உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
100

தாக்குமே தவிர, இடி தாக்காது. அது வெறும் ஒலி எழுப்புவதோடு சரி அந்த ஒலி பிறக்கக் காரணமாயிருப்பதும் மின்னல் தான்.

மின்னல் தன் சக்தியில் 75 சத வீதத்தை தான் பாய்ந்து செல்லும் வழியில் உள்ள காற்று மண்டல வாயுக்களை சூடேற்றிக் கொண்டு செல்வ தில் செலவழித்துக் கொண்டு செல்கிறது. வினாடி நேரத்தில், லட்சத்தில் ஒரு பங்கு சூடு கூட இல்லா திருந்த காற்று மண்டல வாயு, மின்னலின் பயணத் தால் திடீரென்று பல ஆயிரம் டிகிரி உஷ்ணத்திற்கு சூடேற்றப்படுகிறது. அந்தக் கண நேரத் தில் காற்று விரிந்து கருங்குவதின் விளைவாகவே இடி முழக்கம் ஏற்படுகிறது.

இடியும், மின்னலும் பலமாக உள்ளபோது நடந்து செல்ல நேர்ந்தால் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள சில முறைகளைப் பின்பற்றுவது மிகவும் அவசியம். வெட்ட வெளியில் நடந்து சென்று கொண்டிருந்தால், இடி. மின்னல் சமயத்தில் நிற்பதைத் தவிர்த்து தரையில் படுத்து விடுவது நல்லது.

சுற்றுப் புறத்தில் தனியாக ஒரு மரம் இருந்: தால் இடி, மழையின் போது அதன் கீழ் சென்று நிற்கக் கூடாது, மின்னலிலுள்ள பெருத்த மின் சக்தியால் பச்சை மரம்கூடப் பற்றி எரியும்.

வெட்ட வெளியில் நிற்கும் மரம் மட்டுமல்ல; தனியான சிறு குடிசைக்குள்ளும் அம்மாதிரி நேரத்தில் ஒதுங்கக் கூடாது.