உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
101


பெரிய கட்டிடங்களுக்குள் இருந்தால் பாதிப்பு ஏற்படாது. மின்னலின் பாதிப்பு ஏற்படாதிருக்க பெரிய கட்டிடங்களின் உச்சியில் இடிதாங்கிக் கருவி பொருத்தப்படுவதுண்டு.

இடிதாங்கியின் மேல்பகுதி கூராக இருக்கும்; அடிப்பகுதி பூமியில் சற்று ஆழமாகப் பதிக்கப்பட்டிருக்கும். இதனால் இடித்தாங்கியில் இறங்கும் மின்னல்; கம்பி வழியாக பூமிக்குள் இறங்கி; அபாயத்தைத் தடுத்து விடுகிறது.

நடந்தும், வண்டிகளிலும் சென்றுவந்த மனிதன் பூமியில் தனது பயணத்தை மேற்கொள்ள ரயில், மோட்டார் போன்ற பல ஊர்திகளை உருவாக்கினான். அப்போதும் இவை ஒன்றும் அவனது அசுர வேகத்திற்கு ஈடுகொடுத்ததாகத் தோன்ற வில்லை. ஆகாய விமானத்தைக் கண்டுபிடித்தான். இன்று ஆகாய விமானங்கள் உலகெங்கும் வானத்தில் பறவைகளைப் போல் பறந்து கொண்டிருக்கின்றன,

காலத்தின் அருமையைப் புரிந்து கொண்ட மனிதன் அந்த விமானங்களிலும் திருப்தி அடை யாமல் மின்னல் வேக விமானங்களை உருவாக்கினான். 1852-ம் ஆண்டு ஹென்றி கிப்பர்ட்” என்னும் விஞ்ஞானி முதன் முதலாக ஆகாயக் கப்பலை உரு-