பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



105


வால்மீன்களை—வால் நட்சத்திரம் என்றும்; தூமகேது என்றும் பெயரிட்டு அழைத்து வந்த துடன்; அவை தோன்றும் போதெல்லாம் உலகி லுள்ள மக்கள் அனைவரும் பயமும் பீதியும் கொள்ளத் தவறவில்லை,

வால் நட்சத்திரங்கள்—வால்மீன்கள் என்கிற பெயரில் மனிதர்களை அச்சுறுத்தி வந்துள்ள இந்த நட்சத்திரங்கள்—எவ்வித வானியல் விதிகளுக்கும் கட்டுப்படுவதில்லை. அத்தப் பெயரில் ஒரு நட்சத்திரமும் இல்லை,

வால் நட்சத்திரம் மாதிரித் தோற்றமளிக்கிற அந்த வால் மீனுக்கு வாலும் கிடையாது. அது வாயுக்கள் நிறைந்த ஒரு வான் பொருளே.

சூரியனை இத்தகைய வான் பொருட்கள் நெருங்கும் போது, வால் போன்றதொரு பனிக் கோளம் முளைக்கிறது. உறைந்து போயிருந்த பொருட்களனைத்தும் சூடேறி, ஆவியாகவும்; தூசியாகவும் மாறிவிடுகின்றன. சூரியனை விட்டு விலகிப்போகையில்; வால் குறுகி மீண்டும் பனிக் கோளமாகி விடுகின்றன.

வால்நட்சத்திரம் பற்றிய குறிப்பு முதன் முத லில் சைனாவில் தான் பதிவு செய்யப்பட்டிருந்தது. கி.மு. 611-ல் தோன்றிய வால் நட்சத்திரம் ஒன்-