பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

சொத்து சேர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாரே தவிர; அவனது கல்வியைப் பற்றிக் கவலைப்படவில்லை. சமயம் வாய்த்தபோதெல்லாம் அவனும், தன்னுடைய பள்ளிப் படிப்பிற்காக மாமாவை விடாமல் கேட்டுக் கொண்டேதான் இருந்தான்.

அன்றும் வழக்கம் போல அவனுடைய மாமா வயலுக்குப் போகும்போது நினைவு படுத்தினான். அதற்கு அவர்-

"எனக்கும் உன் படிப்பு மேலே அக்கரை இருக்கு அழகப்பா. கொஞ்சம் பொறுமையாயிரு. உன் ஒண்னு விட்ட பெரியப்பா பட்டணத்திலே தான் இருக்கார். லெட்டர் எழுதியிருக்கேன் கவலைப்படாமே இரு," என்று ஆறுதல் கூறிச் சென்று விட்டார்.

அழகப்பனும் பட்டணத்திலுள்ள பெரியப்பா எப்படி இருப்பார்; என்ன பதில் எழுதுவார்? என்று யோசித்துக் கொண்டே பொழுதைக் கழித்தான்.

அன்று மாலை, வழக்கம் போல அவனுடைய நண்பர்கள் அழகப்பனையும் கதை கேட்க மண்டபத்திற்கு அழைத்தார்கள்.

மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு, இருட்டுகிறவரை அந்தச் சிறுவர்கள் பெரியவர்களிடம்