பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
110


இந்தப் பின்னணியில் தமது உழைப்பைத் துவக்கியவர்தான், எட்மண்ட் ஹேலி', என்னும் புகழ் பெற்ற விஞ்ஞானி.

சமீபத்தில் தோன்றிய வால்மீனைக் கண்டு பிடித்தவர் எட்மண்ட் ஹேலி! பிரிட்டிஷ் வானியல் வல்லுனரான எட்மண்ட் ஹேலி கி.பி. 1656-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி லண்டனில் பிறந்தார்.

இவரது தந்தை சோம்புச் செய்தல், உப்புக் காய்ச்சுதால், போன்ற தொழில்களைச் செய்து வந்தார்.

ஹேலிவின் பள்ளிப் படிப்பு செயிண்ட் பால்’ பள்ளியில் துவங்கியது. லத்தீன், கிரேக்கம், மற்றும் கணிதம் முதலியன கற்றார்.

சிறு வயது முதலே ஹேலிக்கு ஆகாயத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பது என்றால் மிகவும் பிடிக்கும். இந்த ஆர்வம் அவரை வானி யல் ஆராய்ச்சியில் ஈடுபட துாண்டியது.

மகனது விருப்பத்திற்குத் தந்தையும் ஊக்கம் ஊட்டினார். பல அறிவியல் சாதனங்களை வாங்கிக் கொடுத்தார். அவற்றில், 24 அடி நீளத் தொலை நோக்கி கருவியும் ஒன்று.

1673—ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு குவின்ஸ் கல்லூரியில் சேர்ந்தார். பின்னாளில் அந்தக்