பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



112

ராயல் சொஸைட்டியின், 'ஃபிலாசபிகல் டிரான் சாக்ஷன்”-என்னும் விஞ்ஞான ஏட்டில் வெளியாயிற்று.

1676-ம் ஆண்டு ஹேவி ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார். "யூனிட்டி' என்னும் கப்பலில் மூன்று மாத காலம் 10 ஆயிரம் கிலோ மீட்டர் துார பயணத்தை மேற்கொண்டார்.

ஆபிரிக்காவுக்கு மேற்கே உள்ள செயின்ட் ஹெலின்’ என்னும் தீவுக்குச் சென்றார். அங்கே தெற்கு வானைப் படமாக்கினார். ஓராண்டு அங்கு அவர் ஆராய்ச்சி நடத்தினார்.

பிரிட்டிஷ் ராயல் கழகம் ஹேலியின் முயற்சி யைப் பாராட்டியது. ஆனால் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமோ, அவர் படிப்பைத் துறந்தவராகக் கருதியது.

பிரிட்டனின் அரசர் முன் வந்தாலொழிய ஹேலியால் பட்டம் பெற இயலாத சூழ்நிலையில்இரண்டாம் சார்லஸ் அரசர் முயற்சியால் ஹேலிக்கு எம். ஏ. பட்டம் கிடைத்தது. அதே ஆண்டு அருைடைய 21-ம் வயதில் ராயல் கழகத்தின் உறுப்பினர் என்னும் மதிப்பும் கிடைத்தது. அவரைப் போன்ற இளம் வயதில் இத்தகைய மதிப்பு வேறு யாருக்கும் கிடைத்ததில்லை.