பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116


1705-ல் ஹேலி "வால்மீன்களில் வானியல் உண்மைகளின் சாராம்சம்” என்னும் புத்தகத்தை வெளியிட்டார். இதுவே முதன் முதலாக நியூட்டனின் கொள்கையைப் பின்பற்றி வானியல் விந்தைகளை அறியும் முதல் முயற்சியாகும்.

ஹேலி தமது இறுதி ஆண்டுகளில் பிரபஞ்சம் பற்றிய சில அடிப்படைக் கருத்துக்களை வெளியிட்டார்.

நியூட்டன் மிகவும் அமைதியான இயல்புடையவர். ரகசியங்களை வெளியிடமாட்டார், கலகலப்பாகப் பேசமாட்டார், பிறருடன் விவாதிக்க மாட்டார். ஆயினும் அவரிடமிருந்த அபாரமான விஞ்ஞான அறிவை ஹேலி புரிந்து கொண்டார்.

எனவே முறைப்படி தன் ஆராய்ச்சிக் கருத்துக்களைத் தொகுத்து எழுதுமாறு அவரை ஹேலி கேட்டுக் கொண்டார்.

நியூட்டன் எழுதத் துவங்கினார். அதை எழுதி முடிக்க அவருக்கு 18 மாதங்கள் ஆயின. அதை ராயல் சொஸைட்டி வெளியிட முன் வந்தது, ஆனால் பணப்பற்றாக்குறை. எனவே, செலவைதானே ஏற்றுக் கொண்டார் ஹேலி. 1687-ல் புத்தகம் வெளியாயிற்று. இதைப் படித்த விஞ்ஞானிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.