பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

கேட்டுக் கொண்டுவந்து சொல்கிற, ராஜாராணிக் கதைகளையும், புராணக் கதைகளையும், மந்திரவாதிக் கதைகளையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருக்க அழகப்பனுக்குப் பிடிக்காது.

திடீரென்று பாதியில் எழுந்து வந்துவிடுவான். ஆயினும், அதைப் பற்றி எதுவும் மனதில் வைத்துக் கொள்ளாமல்-ஆசையோடு அழைக்கும் அந்தக் கிராமத்துச் சிறுவர்களின் ஆசையை அழகப்பனால் புறக்கணிக்க முடியவில்லை.

அழகப்பன் வர ஒப்புக் கொண்டதில் அந்தச் சிறுவர்களுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. ஏனெனில் அழகப்பன், வாழ்க்கையோடு ஒட்டிய மனிதர்களின் வீர சாகலங்களையும், சரித்திரக் கதைகளையும் கூறுவான்.

பிருதிவிராஜன் சம்யுக்தையைத் தூக்கிச் சென்றதையும்; ராஜாதேசிங்கு வெண்குதிரையை அடக்கி அதன் மீது சவாரி செய்து வெற்றி வாகை சூடியதையும் அழகப்பன் விவரிக்கும் போது அந்தச் சிறுவர்கள் வியந்து போய் கேட்பார்கள். எனவே-மகிழ்ச்சியோடு அவர்கள் கை தட்டிக் கொண்டும்; விசிலடித்துக் கொண்டும் ஆரவாரமாக எல்லோரும் மண்டபத்தை அடைந்தனர்.

வேதாளம் மீண்டும் முறுங்கை மரத்தில் ஏறிக் கொண்டு விட்டதை முருகப்பன் கூறி முடிக்கும்