உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
120


ஹேலி, மீண்டும் இவ்வால்மீனைக் காண வேண்டுமானால்;102 ஆண்டுகள் வாழவேண்டும். அவர் அவ்வளவு நாட்கள் உயிர் வாழவில்லை.

தமது எண்பத்தாறாவது வயதில், 1742-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி கிரீன்விச் வான் ஆராய்ச்சி நிலையத்தில் தாம் கண்டுபிடித்த (ஹேலி) வால்மீன் எவ்வளவு துரத்தில் இருக்கிறது என்பதைத் தொலைநோக்கிக் கருவியில் பார்த்துக் கொண்டிருந்தார். நாற்காலியில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருக்கும்போதே அவரது உயிர் பிரிந்துவிட்டது.

கி.பி. 1656 முதல், 1742 வரை வாழ்ந்த பிரிட்டிஷ் வானியல் வல்லுனர்களில் எட்மண்ட் ஹேலியின் பெயர்: பொன் எழுத்துக்களில் பொறிக்க வேண்டியதாகும்.

அனைவரும் 1758-ல் எதிர்பார்த்திருந்தபடி ஹேலி வால்மீன் தோன்றவில்லை. விஞ்ஞானிகள் 1757 முதலே இதனை எதிர்பார்த்திருந்தனர். ஹேலி தாமதமாகத் தோன்றிய செயல்; நியூட்டனின் கொள்கையை வலுப்படுத்தியது.

நியூட்டனின் புவிஈர்ப்பு விசைக் கொள்கை யின்படிப் பார்க்கையில், ஜூபிடரும் சனியும், ஹேலியின் வருகையைத் தாமதப்படுத்துகின்றன என்பதை அறிந்தனர்.