பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/123

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
122அத்தனை நேரம் அவன் கூறிய ஹேலியின் கதையில் அனைவரும் மெய்மறந்து போயிருந்தனர்.

"நண்பர்களே, இந்த ஐந்து நாட்களாக தானும் எனது சகோதரர்களும் உங்களுக்கு பல அறிவியல் கதைகளைக் கூறினோம். எங்களுக்கு இதற்காக நீங்கள் என்ன கொடுக்கப் போகிறீர்கள்?" என்று மேகநாதன் அவர்களை நோக்கிக் கேட்டான்.

உடனே அவர்கள் அனைவரும், பெருத்த மகிழ்ச்சியோடு, "நீங்கள் எதைக் கேட்டாலும் தாங்கள் தருவோம்”, என்று அன்போடு கூறினர்.

அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த தேவ குமாரர்கள், "எங்களுக்கு உங்களிடமிருந்து வேறு எதுவும் வேண்டாம்; ஆனால் நீங்கள் எல்லோரும் நாளை முதல் தவறாமல் பள்ளிக்கு போக வேண்டும். உங்களுடைய முழு கவனத்தையும் கல்வியில் செலுத்தி; உங்களில் ஒவ்வொருவரும் நான் சற்று முன்பு கூறிய ஹேலியைப் போன்ற ஒரு பெரிய விஞ்ஞானியாகவோ, டாக்டராகவோ; இன்ஜினி யராகவோ; அல்ல்து உங்களுக்கு பிடித்த எந்தத் துறையிலாவது தலைசிறந்து விளங்க வேண்டும்.

உங்களால் இந்த கிராமமும், கிராமத்து மக்களின் நிலையும் உயர வேண்டும். ஒவ்வொருவரும்