பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

களது கழுத்துக்களில் தவழ்ந்து கொண்டிருந்த விலையுயர்ந்த முத்து மாலைகள், பார்ப்பவரது கண்களைக் கூசச் செய்தன.

நிமிஷநேரத்தில் நிகழ்ந்த இந்த அதிசயத்தைக் கண்ட கிராமத்துச் சிறுவர்கள் பயந்து நடுங்கிப் போய் அழ ஆரம்பித்து விட்டனர். அவர்கள் தினம் கூறுகிற கதைகளில் வருவது போன்ற ஏதோ அரக்கர்கள் தான் இப்படி மாறு வேஷத்தில் வந்து தங்களைத் தூக்கிச் செல்ல வந்திருப்பதாக எண்ணிக் கொண்டு நடுங்கினர்.

இதைக் கண்டு ஆகாயத்திலிருந்து வந்த சிறுவர்களில் ஒருவன், "நண்பர்களே; எங்களைக் கண்டு நீங்கள் பயப்பட வேண்டாம்; நாங்கள் உங்களுடன் நட்புக் கொண்டு; விளையாட ஆசைப்பட்டே இங்கே வந்திருக்கிறோம்," என்று கூறினான்.

இதைக் கேட்டதும் அனைவருடைய பயமும் நொடிப் பொழுதில் பறந்து போய் விட்டது. உடனே வீரய்யன் "அப்படியானால் நீங்கள் யார்? எங்கிருந்து இப்படித் திடீரென்று வருகிறீர்கள். இப்படிக் கொட்டுகிற மழையில் வந்தும் கூட உங்கள் ஆடைகளில் துளியும் ஈரம் இல்லை; புத்தம் புதியதாய் ஜொலிக்கிறதே" என்று கேட்டான்.

இதைக் கேட்டதும் அந்தப் புதியவர்கள் ஐவரும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்