உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

லிருந்தெல்லாம் எங்களைத் தேவர்கள் என நீங்கள் கண்டு கொள்ளலாமே” என்றான்.

உடனே அழகப்பன், "இதையெல்லாம் பட்டணத்தில் மாஜிக் நிபுணர்கள் செய்து கூட நான் பார்த்திருக்கிறேன்” என்றான்.

உடனே, "அப்படியா?" என்று கேட்ட அக்கினி புத்திரன் தன் வலக்கரத்தை நீட்டினான். அங்கே- கொட்டுகிற மழையின் நடுவிலிருந்த ஒரு மரம் 'குப்'பென்று பற்றி எரிந்தது.

வாயு குமாரனான தென்றலழகன் தன் ஒரு கரத்தை நீட்டினான். பற்றி எரியும் மரத்தைச் சுற்றிலும் பெரும் சூறாவளி ஒன்று எழுந்தது. அந்தப் பேய்க் காற்றினால் ஒன்றனபின் ஒன்றாய்ப் பல மரங்கள் பற்றி எரியத் துவங்கின.

அதிலிருந்து பயங்கரமாகப் பொங்கி எழும் கரும்புகைகளை நோக்கி மேகநாதன் கையை உயர்த்தினான். சூழ்ந்திருந்த அத்தனை புகை மண்டலமும் சுழன்று சுழன்று ஒரு பந்து உருவம் பெற்று புகை சூழ்ந்த தீப்பந்தாக ஆகாயத்தில் அந்தரத்தில் எரிந்து கொண்டிருந்தது.

அருகிலிருந்த கங்காதரன் தன் வலக்கரத்தை உயர்த்தினான். பற்றி எரிந்து கொண்டிருக்கும்