பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

தீப்பந்திற்கு மேல் அருவியாக மழை கொட்டி அந்தத் தீயை அணைத்தது.

அந்தப் பிராந்தியம் முழுவதும் சிதறியிருந்த நீரும், நெருப்புத்துண்டுகளும், கரிக்கட்டிகளும், மழை நீரும் பூமித்தாயின் மடியில் சரணடைந்திருந்தன. அவற்றை முக மலர்ச்சியுடன் நோக்கிய உலகநாதன் தன் வலக்கரத்தை உயர்த்தினான். அனைத்தும் மாயமாய் மண்ணுக்கடியில் சென்று, முன்பு போல் அங்கே, மரமும், செடி கொடிகளும் எழும்பி நின்றன.

இவற்றையெல்லாம் பிரமிப்போடு பார்த்துக் கொணடிருந்த கிராமத்துச் சிறுவர்கள் தங்களையுமறியாமல், “எங்களை மன்னித்து விடுங்கள்; ஒன்றும் செய்து விடாதீர்கள்,” என்று பயந்து போய் அவர்களின் கால்களில் விழுந்தனர். அழகப்பன் மட்டும் அசையாமல் நின்று கொண்டிருந்தான்.

அவர்களை வாரித் தழுவியபடி தூக்கி நிறுத் திய தேவ குமாரர்கள், "நட்புத் தேடி வந்த எங்களிடம் நீங்கள் இப்படி நடந்து கொண்டு எங்கள் மனதை வருத்தலாமா? எழுந்திருங்கள் நாம் அனைவருமே சகோதரர்கள். இனிய நண்பர்கள்" என்றனர். அப்போது உலகநாதன் அருகிலிருந்த அழகப்பனிடம், "உங்கள் பட்டணத்து மாஜிக்காரன் இப்படியெல்லாம் கூடச் செய்து காட்டுவானா?” என்று கேட்டான்,