பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17



உடனே அழகப்பன், உலகநாதனை நோக்கி, "என்னை மன்னித்து விடு நண்பா. இந்தக் கிராமத்துச் சிறுவர்களைவிட நான் சற்று அதிகமாக-ஐந்தாம் வகுப்புவரைப் படித்திருக்கிறேன் என்கிற கர்வத்தினால்- அறியாமல் அப்படிக் கூறிவிட்டேன்." என்றான் குரல் தழுதழுக்க.

உடனே உலகநாதன், "நண்பா! கற்றது கைம்மண்ணளவு; கல்லாதது உலகளவு" என்று மாபெரும மேதைகள் எல்லாம் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

உனது கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியே, நான் கற்றது போதாது; இன்னும் கற்க வேண்டியவை எண்ணிலடங்காது" என்று கூறாமல் கூறுவதுபோல் எப்போதும் தன் கரத்தில் புத்தகத்தை ஏந்திக் கொண்டிருப்பதை நீ பார்த்ததில்லையா?

இதோ உங்கள் முன்னால் நிற்கும் (பிருத்வி) நிலம்; (அப்பு)- நீர் (தேயு)- நெருப்பு; (வாயு)-காற்று; (ஆகாயம்)- இந்த பரத்த அண்டம், ஆகிய எங்கள் ஐந்து பேருடைய அருளின்றி இந்த உலகில் ஒரு புல்பூண்டுகூட முளைக்க முடியாது என்னும் போது, மானிடர்களாகிய நீங்கள் உயிர் வாழ்வது ஏது?

அப்படியிருந்தும் நாங்கள் எங்களுடைய சர்வ வலலமைகளையும் எண்ணிக் கர்வப்படாமல்;

பஞ்ச-2