பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

ஒற்றுமையாய்-நாங்கள் ஐவரும் இணைந்தே உலகையும்-உலகத்து மக்களாகிய உங்களையும் காக்கிறோம்.

அழகப்பா-நாளை நீ எவ்வளவு பெரிய கல்வி கற்று; எத்தனை பெரிய பட்டங்கள் வாங்கி னாலும்; அவை அனைத்திலும் நாங்கள் சம்பந்தப்பட்டிருப்போம். இந்த உலகமே எங்களைச் சார்ந்து சுழல்கிறது என்கிறபோது; இதனிலும் பெரியதை நீ எங்கு சென்று காண்பாய்?

அழகப்பா, உங்களிடமிருந்து மண்ணுலக கதைகளைக் கேட்டு அறியும் ஆவலில் நாங்கள் இங்கு வந்தோம். ஆனால் அதற்கு முன் நாங்கள் எங்கள் ஒவ்வொருவருடைய கதையையும் கூறுகிறோம்.

அற்புதங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த எங்களின் கதைகளைக் கேட்டால் நீங்கள் பிரமித்துப் போவீர்கள். எங்கள் வலிமையைக் கண்டு மயிர்க் கூச்செறிவீர்கள். மிகச் சிறந்த வாழ்க்கைக் கல்வியின் அடிப்படையே எங்கள் கதை.

இனிய நண்பர்களே! இன்று நேரமாகி விட்டது. வீட்டில் உங்கள் பெற்றோர் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். மழைகூட விட்டு விட்டது. இன்று போய் நாளை வாருங்கள். நாங்களும் நாளை இதே இடத்திற்கு இதே நேரத்திற்கு