பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21


கூடி இருந்த அனைவரும், தேவகுமாரர்களைச் சுற்றி வட்டமாக உட்கார்ந்து கொண்ட தும் உலகநாதன் கூறினான் :

"என் அருமை நண்பர்களே! உலகத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும்-மனிதர்கள் உட்பட-உயிர் வாழ்வதற்கும் தங்குவதற்கும் உறைவிடமாக; தளமாக உள்ளது இந்த மண்தான்; அதாவது இந்த பூமிதான். அனைத்திற்கும இதுவே ஆதாரம். அனைத்து உயிர்களிடத்தும் மட்டமற்ற அன்பும், இயக்கமும் கொண்டவள் பூமி அன்னை.

உண்ணுவதற்கு உணவாக நெல்லும், மணி யும், கனியும், கிழங்குகளுமாகத் தருபவள் அவளே-

மனிதனின் மானத்தைக் காப்பதற்கு உடைகளாகப் பருத்தியும், பட்டும் தருபவள் அவளே-

அழகிய மாதர்கள் அணிகலன்கள் பூட்டி மகிழத் தங்கமும், வைரமுமாகத் தன்னிலிருந்து தருபவளும் அவளே-

இத்தகைய கருணையே வடிவான பூமி-அதாவது உலகம் பிறந்த கதையையும்; மற்றும் அதன் பல்வேறு சிறப்புக்களையும் நான் இப்போது உங்களுக்குக் கூறப்போகிறேன்.

அண்டம் (UNIVERSE) என்றால் என்ன? என்று ஆங்கிலக் கல்விபடிக்கும் அழகப்பனுக்குப்