22
புரியும் என்று நினைக்கிறேன். அண்டம் என்பது இந்தப் பிரபஞ்சத்தைக் குறிப்பதாகும்.
இந்த அண்டம் தோன்றி கோடிக்கணக் கான ஆண்டுகள் இருக்கும் என்று வானியல் ஆராய்ச்சியாளர்களும், புவி இயல் ஆராய்ச்சியாளர்களும் கூறுகின்றனர்.
அண்டவெளியில் காணும் கிரகங்கள், நட்சத்திரங்கள் இவையாவும் அண்டத்தினுள் அடக்கம். விஞ்ஞான ஆராய்ச்சியாளர் கருத்துப்படி சூரியன் (SUN); சந்திரன் (MOON); பூமி (EARTH); வியாழன் (JUPITER); வெள்ளி (VENUS); சனி (SATURN): பூளூட்டோ (PLUTO) முதலிய கிரகங்களும், எண்ணற்ற நட்சத்திரங்களும், அண்ட வெளியும் சேர்ந்தே அண்டமாகக் கருதப்படுகிறது. (அவை):
உலகம் என்பது - நாம் வாழும் பூமியை மட்டுமே குறிப்பதாகும்.
விஞ்ஞானக் கருத்துப்படி உலகம் ஒன்றாயினும்; புராணக் கருத்துப்படி உலகங்கள் பதினான்கு உள்ளன.
1) பூலோகம்; 2) புவலோகம்; 3) சுவலோகம் 4) சனலோகம் 5) தபோ லோகம் 6) மகலோகம் 7) சத்திய லோகம் ஆகிய ஏழும் மேல் உலகங்களாகவும்; 8) அதலம் 9) விதலம், 10) சுதலம் 11) தராதலம் 12) இரசாதலம் 13) மகாதலம்