பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
24

நிதர்சனமாகவும்-ஆராய்ச்சி முடிவுகளின் மூலமாக நிச்சயமானவற்றையுமே விஞ்ஞானம் ஒப்புக் கொள்கிறது,

நாம் உறக்கம் தெளிந்து படுக்கையை விட்டு எழுந்திருந்தாலும், எழுந்திருக்காவிட்டாலும், அதி காலையில் கதிரவன் தன் பொற் கிரணங்களை வீசிய வண்ணம் உதிக்கத் தவறுவதில்லை. கடமையே உருவானவன் கதிரவன். இந்த சூரிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கிரகமே நீங்கள் வாழும் இந்த பூமி.

இந்த பூமி சூரியனிலிருந்து சுமார் 92, 870,000 மைங்கள் துரத்திலிருக்கிறது. பூமியானது ஐந்தாவது பெரிய கோளாகும்.

பூமியின் கன அளவு:

(259, 913, 575, 000 சதுர மைல்கள்)

பூமியின் குறுக்களவு (துருவ வழி)

7900 சதுர மைல்கள். பூமத்திய ரேகை வழி 79 26, 7 மைல்கள்.

பூமியின் சுற்றளவு (துருவ வழி) 24861 : ச. மைல்கள்.

பூமியின் சுற்றளவு:

(பூமத்திய ரேகை வழி) 24 90 2, 5 சதுர மைல்கள்.