உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
25


பூமியின் பரப்பளவு : 196, 195, 072 சதுர மைல்கள்.

இந்த பூமியின் உயிர் நாடி சூரியனே. சூரியனை மையமாகக் கொண்டுதான் பூமியும், பிற கிரகங்களும் சுற்றுகின்றன; வாழ்கின்றன. சூரியன் தானே ஒளிரக் கூடிய ஒரு கோளம். கால்லா சக்திகளுக்கும் சூரியனே மூல காரணம். சூரியன் இல்லை என்றால் ஒளியில்லை, நீரில்லை, உயிரில்லை, விலங்குகள் இல்லை, தாவரங்கள் இல்லை-ஏன்-வாழ்வே இல்லை எனலாம்.

சூரியனுக்கும் பூமிக்குள்ள துாரம் சுமார் 92. 870, 000 மைல்கள். சூரியனின் குறுக்களவு 864 100 மைல்கள். சூரியனுடைய மேற்பரப்பு, பூமியி உறுடைய மேற்பரப்பைப் போல், 12000 மடங்கு அதிகமானது. கன அளவு, பூமியைப் போல 1, 300, 000 மடங்கும்; எடை பூமியைப் போல, 332 000 மடங்கும்; சூரியனின் அடர்த்தி, 1,412 மடங்குமாகும்.

மற்ற கிரகங்கள் சூரியனைச் சுற்றுகின்றன; சூரியனோ, தன்னைத் தானே சுற்றிக் கொண்டு வருகிறது. இவ்விதம் சூரியன் ஒருமுறை தன்னைச் கற்றிக் கொள்வதற்கு சுமார் 4 வாரங்களாகின்றன.

சூரியனுடைய கவர்ச்சியானது பூமியினுடைய அவர் சிசியை விட சுமார் 28, மடங்கு அதிகம்.