பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
26


சூரியனின் மேற்பரப்பு வெப்ப நிலை. 12.000 டிகிரியாகவும், மத்தியில் 40, 000 000 டிகிரியாகவும் உள்ளதால், இந்த அதிகமான வெப்ப நிலையில் எல்லா உலோகமும் உருகி விடும்.

எனவே, சூரியன் திடப் பொருளாகவோ, திரவப் பொருளாகவோ இருக்க முடியாதாகை யால், ஆவியாகவே இருத்தல் வேண்டும்.

பல கோடி ஆண்டுகளுக்குமுன் பிரபஞ்சத்தில் இப்போது நாம் பார்க்கிற சூரியன், சந்திரன் நட்சத்திரங்கள், இந்த பூமி-ஆகிய ஏதுமே இல்லை.

அண்டம் முழுதும் பரந்த வானக் கடலில், ஆவியும், துாசிகளுமாகவே சுழன்று சுழன்று வீசிக் கொண்டிருந்தன. வானமண்டலம் தாங்கமுடியாத குளிர்ச்சியுடையதாக இருந்தது. அதனால் அந்தக் குளிர்ச்சியில் ஆவியும், துரசியும் திரவ நிலையை அடைந்து நீரைப் போன்ற உருவைப் பெற்றது. இது சூரியனின் முதல் உருவம். சூரியன் ஒரு நெருப்புக் கோளமாதலால் அதன் மூலப்பொருளாகிய ஆவியும், நீரும்கூட வெப்பமாயிருக்கும். வாயு உருவில் சூரியன் உருப்பெற்று விண்வெளியில், வேகமாகச் சுழன்று வந்தது. அப்போது விண் வெளியில் மிதந்து கொண்டிருந்த மூலப் பொருட் கள், சுழன்று கொண்டிருந்த சூரியன்மீது வளை யங்களாகவும், உருண்டையாகவும், பலவித தோற்