பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
27


றங்களிலும் படிந்தன. நாளடைவில், சூரியனின் சுழற்சி காரணமாக, சூரியனின் மேல்படிந்த பொருட்கள் ஒவ்வொரு வடிவத்தில், ஒவ்வொன்றாய் தெரித்து விழுந்தன.

இப்படிச் சூரியனிலிருந்து பிறந்த கிரகங்கள் பூமி உட்பட, (செவ்வாய், புதன், வியாழன். வெள்ளி, சனி, யுரானஸ், நெப்டியூன், புளுட்டோ ஆகிய) ஒன்பது கிரகங்களாகும்.

பூமியின் வயது சுமார் 200 கோடி ஆண்டுகள் இருக்குமென விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

சூரியனிலிருந்து பிரிந்து, அக்கினிப் பிழம்பாக கொதிக்கும் ஆவி உருவில் இருந்த பூமியானது விண்வெளியில் உள்ள குளிர்ச்சியால், திரவ நிலையை அடைந்து; அந்த திரவ நிலையும், தொடர்ந்த குளிர்ச்சியின் காரணமாகவும்கெட்டிப் படத் துவங்கியது.

சூரியனிலிருந்து தீப் பிழம்பாக வெளியே விழுந்த பூமி, நீர் உருவுக்குமாறி, குளிர்ச்சியின் காரணமாக கெட்டியாகிவிட்டாலும், பூமியின் உட்புறம் உள்ள அதன் பழைய நெருப்புத் தன்மை அப்படியேதான் இருக்கிறது.

சூரியனின் மேற்புறத்தின் வெப்பநிலை எட்டாயிரம் டிகிரி என்றால், பூமியினுள்ளும், சில இடங்களில் இந்த எட்டாயிரம் டிகிரி வெப்ப நிலை