உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29



◯ சூரியனிலிருந்து அதிக வெப்பம் பூமியைத். தாக்கினால் உயிரினங்கள் பொசுங்கி அழிந்து விடும்.

◯ வெப்பம் குறைந்தாலும்,தாங்க முடியாத குளிரினால் உயிரினங்கள் விறைத்துப் போய் விடும்.

இந்தத் தீமைகளை, பூமிக்கு மேலே உள்ள வாயு மண்டலம் தடுத்து சமனப்படுத்தி தேவையான சூரிய வெப்பந்தை மட்டும் பூமிக்கு அனுப்புகிறது.

இப்படி ஒரு வடிகட்டியைப் போல் பூமிமயப் பாதுகாத்து வரும் வாயு மண்டலம், விண்ணிவிருந்து பூமியை நோக்கி வரும் ஆபத்தான எரிகற்களையும்கூட பூமியின் மீது விழாதபடி, குடையாகத் தாங்கி-வாயு மண்டலத்திலேயே பொசுக்கிச் சாம்பலாக்கி விடுகிறது.

அதே சமயம்-சூரிய வெப்பத்தினால் ஆவியாக மேலே எழும்பும் நீராவியை, தன்னைக் கடந்து செல்ல முடியாதபடித் தடுத்து நீராவியைக் குளிரச் செய்து திரும்பவும் மழையாகப் பூமிக்கு அனுப்பி வைக்கும் பணியையும் இந்த வாயு மண்டலங்களே செய்கின்றன. இப்படிப் பூமிக்கு உற்ற துணைவனாகச் செயல்படும் வாயு மண்டலம் மற்ற கிரகங்களுக்கு