பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
30

இல்லாமையினால்தான் மற்ற கிரகங்கள் மொட்யைாக உயிரினங்கள் அற்றுக் கிடக்கின்றன.

சூரிய ஒளியில், பச்சை. ஊதா, அவுரி, பழுப்பு. மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய ஏழு நிறங்கள் அடங்கியுள்ளன. இந்த வண்ணக் கலவைகளை வானத்தில் எப்போதாவது தோன்றும், வானவில்வில் காணலாம். சூரியனின் வெப்ப ஒளி இவ்வித வர்ண ஜாலங்களைத் தோற்றுவிக்கின்றன. வானத்திலுள்ள வண்ணத் துகள்கள் மீது சூரிய ஒளி பட்டுச் சிதறும் போது; அந்தத் துகள்களில் எந்த வண்ணம் அதிகமாயிருக்கிறதோ அந்த வண்ணம் பளிச்சென்று வானில் தெரியும். அதனால்தான் ஆகாயம் சில சமயம் சிவப்பாகவும், நீலமாகவும், பிறவண்ணங்களாகவும் நம் கண்ணிற்குத் தோன்றுகிறது.

பூமியின் வடிவம் உருண்டை என்று:பொதுவாகக் கூறினாலும், அதன் இயற்கை வடிவம் பந்தைப் போன்றது? அல்ல; ஆரஞ்சுப்பழம் போன்றது. மேலும்,:கீழும் சிறிது தட்டையாக இருக்கும்.

பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு எல்லாஇங்கிரகங்களையும்; போலவே சூரியனை வலம் வருகிறது. பூமி தன்னைத்தர்னே ஒரு முறை சுற்றிக் கொள்ள அதற்கு ஆகும் நரம்: சுமார் 24 மணித்துளிகள். அதாவது.ஒரு முழு நாள்