பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

இந்த ஏழு கண்டங்களையும், 1. பசிபிக்கடல் 69,374,182 சதுர மைல் 2. அட்லாண்டிக் 41,105,436 சதுரமைல் 3. இந்தியக் கடல் 28,925,524 சதுரமைல் 4. அண்டார்டிக் 5,731,350 ச. மைல் 5. ஆர்டிக் 5,440,000 சதுரமைல்கள்

ஆகிய ஐந்து பெருங்கடல்கள் சூழ்ந்துள்ளன.

இதேபோல் பூமியின் மீதுள்ள பெரிய மலைகள் ஆசியாவில் 1. இமய மலை, 2. இந்துகுஷ் மலை, 3. சுலைமான் மலை, 4. அல்டாய் மலை, 5. யாப்ளனாய் மலை. 6. சயான் மலை 7. கனரல் ஆகிய ஏழு பெரிய மலைகளும்.

ஐரோப்பாவில் 1. ஸ்காண்டி நேவியன் 2. கார்பபேத்தியன் 3. ஆல்ப்ஸ் 4 பிரான்னிஸ் 5. காண்டாபிரியன் ஆகிய மலைகளும், ஆப்பிரிக்காவில் : அட்லாஸ், அபிசீனியன், டேபிள் ஆகிய மலைகளும்-அமெரிக்காவில் இராக்கிஸ், ஆண்டிஸ் ஆகிய மலைகளும் உள்ளன.

பூமி அன்னையின் செல்லக் குழந்தைகளில் காடும் ஒன்று. எந்த ஒரு நாடும், வளமுடையதாகத் திகழ வேண்டுமானால் அதன் மொத்தப் பரப்பில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு காடுகளாவது இருக்க வேண்டும் என்பது புவி இயல் நிபுணர்களின் கருத்து. பஞ்ச-3