34
ஊற்றுப் பெருகிடவும், ஆறுகள் நீர் நிரம்பி ஒடிடவும் ஆதாரமாக உள்ள மழைதனை ஈர்த்து மண்ணுக்கு அளிப்பன காடுகளே.
கதிரவன் வெம்மையால் ஆவியாக மாறுகின்ற கடல் நீரெல்லாம் கரிய மேகங்களாக உருவெடுத்து வானில் உலா வரும்போது! அதனைத் தடுத்து குளிர்வித்து, மழையாய் பொழிய வைக்கும் கருவியாய்க் கடமையாற்றுவது காடுகளே.
கடலை நோக்கி ஒடும் மழைநீரை, மரங்கள், தன் உடலால் தடுத்து; வேர்க்கால்கள் வழியே, மண்ணுக்குள் அனுப்பி வைக்கின்றன. அந்த நீரை, இயற்கை நீர்த்தேக்கங்களாய் மண்ணுக்குள் தேக்கி வைத்துப் பின், அதனை சுனையாகவும், ஊற்றாகவும், ஆறாகவும். அருவியாகவும். பூமி அன்னை வெளிப்படுத்துகிறாள். இயற்கையின் இந்த அரிய செயல்களுக்குக் காரணமாய் இருப்பது காடுகளே.
அடர்ந்த காடுகளில் மனிதப் பிணியை நீக்க வல்ல அரிய மூலிகைகள் கிடைக்கின்றன. மூங்கில், ஈத்தை, ரப்பர், யூகலிப்டஸ், வாட்டில், பைன் போன்ற மரங்களிலிருந்து கிடைக்கும்கூழ், காகிதம் தயாரிக்க உதவுகின்றது.
இவைதவிர, வீடுகளில் உணவு தயாரிக்கவும், ஆலைகளில் பற்பல பணிகள் புரிவதற்கு எரிபொருளாக உதவுவதும் மரங்களே!