பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

வீடு கட்டவும்; பாலங்கள் அமைக்கவும், ரயில் எஞ்சின் தண்டவாளங்கள் நிறுவவும், இப்படி எண்ணற்றவகையில் காடும், காட்டுப் பொருளான மரங்களும் பயன் தருகின்றன.

பூமியின் வயதைக் கண்டறிவதில் புவி இயல் நிபுணர்கள் பற்பல முறைகளைக் கையாண்டனர், கடல் நீரிலுள்ள உப்பின் பரிமாணத்தைக் கொண்டு பூமியின் வயதைக் கணக்கிட்டனர். உலகிலுள்ள ஆறுகள் அனைத்துமே கடலில்தான் சங்கமமாகின்றன. அதன்படி ஒவ்வொரு வருடமும் உலகிலுள்ள ஆறுகள் அனைத்துமாக சுமார் 10 கோடி டன் உப்பைக்கடலில் கொண்டு போய்த் தள்ளுகின்றனவாம். இந்தக் கணக்குப்படி கடலிலுள்ள உப்பு 8 கோடி வருஷத்தில் சேர்ந்திருக்கலாம் என்று எண்ணுகின்றனர். எனவே பூமியின் வயதும் 9 கோடி வருஷங்களாக இருக்கலாம் என்று அகட்ெடுள்ளனர். இந்த 9 கோடி ஆண்டுகளில் பூமி தன்னை வெகுவாக மாற்றிக் கொண்டே வருகிறது.

இப்போது பல கண்டங்களாக உள்ள நிலப்பரப்பு ஆரம்பத்தில், உலகம் முழுவதும் ஒரு மாபெரும் கண்டமாகவே இருந்துள்ளது. கடல் அரிப்பினாலும், நில நடுக்கங்களினாலும், இந்த ஒரே கண்டத்திலிருந்து, பல நிலப்பரப்புகள், பிரிந்து விலகத் துவங்கின. இவ்வாறு, பிரிந்து