உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

காடுகளும், நதிகளும், மனிதனின் உணவிற்கு வகை செய்கின்றன. சமவெளிப் பிரதேசங்களில் விளை நிலங்களில்-மனிதன் இன்னும் தனக்கு வேண்டிய உணவுகளை எல்லாம் பெற பூமி உதவுகிறது.

மலையிலிருந்து மழைநீராகவும்; பனி உருகியும், நதிகள் நீரைச் சுமந்து செல்கின்றன. அந்த நீரை மனிதன் அங்கங்கே அணைகள் கட்டித் தடுத்து, விவசாயத்திற்கும், மின்சார உற்பத்திக்கும் வகை செய்து கொண்டான்.

நீரிலிருந்து கிடைக்கும் மின்சாரம் மனித நாகரீகத்தின் வளர்ச்சிக்கு பெரும் துணையாகத் திகழ்கிறது. அது போலவே, பூமியின் அடியிலிருந்து தோண்டி எடுக்கப்படும் நிலக்கரியும், மனித நாகரிக வளர்ச்சிக்கு உதவியதோடு அத்தியாவசியமான மிகச் சிறந்த எரிபொருளாகவும் பயன்படுகிறது.

முதன் முதலாக இங்கிலாந்திலுள்ள "நியூ காசில்” என்னுமிடத்தில், 18-ம் நூற்றாண்டில் நிலக்கரி தோண்டி எடுக்கப்பட்டது. இன்று உலக நாடுகள் அனைத்தும் நிலக்கரியின் பால் கவனம் செலுத்தியுள்ளன.

ஏனெனில்-