பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

வெறும் எரி பொருளாக மட்டுமின்றி, மின்சாரம், எண்ணை, பெட்ரோல், இவற்றைப் போலவே நிலக்கரியும் பல விதங்களில் மக்களின் தேவைக்கு இன்றியமையாத தாகிவிட்டது.

நிலக்கரியிலிருந்து தார்; கந்தகம்; கோக் என்னும் கல் கரி, காஸ்; பிளாஸ்டிக்; வெடிமருந்துகள், அம்மோனியா, நோய்தீர்க்கும் மருந்துகள், வாசனைத் தைலங்கள், சாக்கரின் என்னும் சர்க்கரை, பெட்ரோல்' எண்ணை; பூச்சி மருந்துகள், செயற்கை ரப்பர்; சாயங்கள், உரங்கள் போன்ற பல பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இன்னும் நிலக்கரியிலிருந்து சோப்புகள், சலவைக்கு வேண்டிய பொருள்கள், கொடிய நோய்களைக் குணப்படுத்தும் 'சல்பர்' மருந்துகள் தலைவலி மருந்துகள் கூடத் தயாரிக்கப்படுகின்றன.

நிலக்கரியில் கரிப் பொருள் 80 சதவிகிதமும், உயிர்வளி 8.8 சதமும்; நீர்வளி 5.5. சதமும், உப்புவளி 1.5 சதமும், கந்தகம் 0.8 சதமும் சாம்பல் 3.4 சதவிகிதமும் உள்ளன.


நிலக்கரியிலிருந்து வெளிப்படும் ஆவியினால் 1787-ம் ஆண்டு "டொனால்டு' என்னும் விஞ்ஞானி விளக்கெரியவைத்துக் காண்பித்தார். அதைத் தொடர்ந்து 1802-ம் ஆண்டு பர்மிங் ஹாம் தொழிற்சாலையில் முதன் முதலாக நிலக்கரிகாஸ் விளக்குகள் போடப்பட்டன.