44
-'மழை நீரால் இவ்வுலகம் நிலைத்து வருகின்றது. அதனால் அம்மழை நீர் அமிழ்தமென்று எண்ணும் சிறப்புடையதாகும்'-என்றும்;
"துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய து ஊம் மழை"-
-'மக்கள் உண்பதற்குரிய உணவுகளை உண்டாக்கித் தருவதோடு, பருகுவதற்குத் தானும் ஓர் உணவாக இருப்பதும் மழையாகும்'-என்றும்;
"விசும்பின் துளிiழின் அல்லால் மற்றாங்கே
பசும்புல் தலை காண்பு அரிது"-
-மழை மட்டும் பெய்யவில்லை என்றால், இவ்வுல கில், பசும்புல்லின் முளையைக் கூடப் பார்க்க இயலாமற் போய்விடும் என்பதெல்லாம் வான் சிறப்பு பற்றிய வள்ளுவரின் வாக்காகும்.
மனித உடலில் ரத்தம், சதை, எலும்புகள், நரம்பு என்று இப்படிப் பல பொருள்கள் இருந்தாலும்; மனித உடலில் பெரும்பகுதி நீர்தான். அதுபோன்றே-
இந்தப் பரந்த உலகின் மொத்தப் பரப்பளவில் முக்கால் பங்கு நீரால் சூழப்பட்டு; மீதமுள்ள கால் பகுதியே மக்கள் வாழத் தகுந்த நிலப் பகுதியாக விளங்குகிறது.