உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

பயனபடுவதில்லை ஒரு காலன் கடல்நீரைக் குடிநீராக மாற்ற வேண்டுமானால் லட்சக் கணக்கான ருபாய் செலவிட வேண்டியிருக்கும். ஆனால் இந்த பயன மாற்றத்தை இயற்கையே இலவசமாகச் செய்து, பரிசுத்தமான குடிநீராக-மழையாக, வனம் பூமிக்கு அனுப்பி வைக்கிறது.

மேலும், இந்த அளவு கடல் நீரை செயற்கையாக மனித முயற்சியினால் ஆவியாக மாற்ற வெண்டுமென்றால் நூறு கோடி கிலோவாட் உற்பத்தித் திறனுள்ள, 40 கோடி மின்சார நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் இதற்குத் தேவைப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

நமது பூமியில் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் நீரின் கொள்ளளவு, 1,38,60,00,000 கன கிலோ மீட்டர்களாகும். ஆனால் இதில் மனிதன் அருந்தக்கூடிய நல்ல நீரின் பங்கு 2.5 சதவிகிதம்தான்.

இவ்வளவு மதிப்பு வாய்ந்த தண்ணிரை வீணாக்கலாமா? அதனால்தான் முன்னோர்கள் "தாயைப் பிழைத்தாலும்; தண்ணீரைப் பிழைக்காதே" என்று அறிவுரை கூறினார்கள்.

ஒருவன் தன் தாய்க்குக் கெடுதல் செய்தால் அதன் விளைவு அவனோடு, அல்லது அவன்