48
குடும்பத்துடன் நின்றுவிடும். ஆனால், ஒடுகிற ஆற்று நீரை, அல்லது குடிக்கிற குடிநீரை ஒருவன் கெடுத்தால் அல்லது அசுத்தப்படுத்தினால், அதனால் ஒரு ஊர் மட்டுமல்ல; அந்த நீரைப் பருகுகிற மக்கள் அனைவருமே பிணியால் பாதிக்கப்படுவர் என்பதுதான் பொருள்.
சில சமயங்களில் அதிகமாகப் பெருக்கெடுத்தோடும்போது ஆற்று நீர்; அருகிலுள்ள ஊர்களையெல்லாம் அழித்துச் சென்றுவிடும். அதே போல சில சமயங்களில் ஆற்றில் குடிக்கக் கூடப் போதுமான நீர் இல்லாமலும் வறண்டும் கிடக்கும். அப்போது மக்கள் குடிப்பதற்கும், பாசனத்திற்கும் நீரின்றி அவதிப்படுவார்கள்.
இம்மாதிரி நிலைமை ஏற்படாமல் இருப்பதற்காகவே, பெரிய ஆறுகளின் குறுக்கே பெரிய பெரிய அணைகள் கட்டி நீரைத் தடுத்து டாம்களில் சேமித்து வைத்துக் கொள்வார்கள்.
சேமிப்பு என்பது பணத்திற்கு மட்டுமல்ல-மனிதனின் அத்தியாவசியத் தேவையான, நீர் மின்சாரம், மற்றும் எரிபொருளுக்கும் கூட அவசியமான ஒன்று.
இம்மாதிரி நீரைத் தேக்கி வைக்கும் சென்னை மாநிலத்தில் உள்ள அணைக் கட்டின் பெயர், மேட்டுர் அணை. 480 லட்சம் ரூபாய் செலவில் ஆறு ஆண்டு காலத்தில் இது கட்டி முடிக்கப்-