பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

உறைந்து போன பனிக்கட்டி இயற்கை சூட்டினால் மீண்டும் தண்ணிரின் பழைய நிலைக்கே வந்து விடுகிறது.

நீரைக் காய்ச்சினால் அது ஆவியாக மாறி மேலே செல்கிறது, ஆவியைக் குளிரச் செய்தால் மீண்டும் பழைய நிலைக்கே தண்ணிராகத் திரும்பக் கிடைத்து விடுகிறது.

இது போன்ற கண்ணா மூச்சி விளையாட்டு, இன்று நேற்று ஆரம்பித்தது 'அல்ல -பூமி தோன்றிய நாளிலிருந்தே அது தண்ணிருடன் விளையாடத் துவங்கி விட்டது.

பொறுமைக்கு ஒர் எடுத்துக் காட்டாகவும், பல கோடி உயிரினங்களுக்கு புகலிடமாகவும் உள்ள இந்தப் பூமி, அனற்பிழம்பாகச் சுழன்று கொண்டிருக்கும் கதிரவனிலிருந்து உருண்டு திரண்டு விண்டு விழுந்த ஒரு கோளம் என்பதை உலகநாதன் கூறினான்.

அது, கதிரவனின் ஈர்ப்பு சக்தியால் வெகு தூரம் செல்ல முடியாமல், தடைப்பட்டு, அக்கினி உருண்டையாகச் சுழன்று கொண்டிருந்தது.

அப்போது விண்வெளியில் நிலவிய கடுங்குளிர் நீராவியைக் குளிரச் செய்த போது, நீர் துளிர்த்தது. துளிர்த்த நீர் பூமியை வாழ வைக்க-பூமியை நோக்கிப் பெய்தது.