பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51

பூமியை நோக்கி வந்த அற்புதமான இந்த முதல் மழை, சூரியனிலிருந்து விடுபட்டு வெப்பத்தோடிருந்த பூமியின் மேல் பரப்பைத் தீண்டியதுமே-கொதிக்கிற பாத்திரத்தின் மீது தெளித்த நீரைப் போல- பூமி சிலிர்த்து, உடனே தன் மீது விழுந்த மழை நீரை ஆவியாக மாற்றி வானுக்கே அனுப்பி விட்டது.

பூமியிலிருந்து வானை நோக்கி வந்த நீராவியை, வான மண்டலம் குளிர்ச்சியால் நீராக மாற்றி மீண்டும் பூமிக்கே மழையாகத் திருப்பியனுப்பியது.

கொதித்துக் கொண்டிருந்த பூமி மீண்டும் தன் மீது விழுந்த நீரை ஆக்ரோஷத்துடன் ஆவியாக மாற்றி, மேலே அனுப்பி வைத்தது.

வானமும் சளைக்காமல், ஆவியை மழை நீராக மாற்றி தொடர்ந்து பூமிக்கே அனுப்பி வைத்தது.

பல ஆயிரக் கணக்கான ஆண்டுகள் இடை விடாது வானுக்கும் பூமிக்கும் நடந்த போட்டியில்; பூமி அன்னை மனமிரங்கி, மழையை ஏற்றுக் கொள்ளச் சித்தமானாள்.

தொடர்ந்து பன்னெடுங்காலமாகப் பெய்த மழையினால், கொதித்து அக்னி உருண்டையாயிருந்த பூமியின் மேல் பரப்பில் நிலவிய வெப்பம்,