பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணையும் போட்டுத் தேச்சுக் குளுப்பாட்டறது அந்தத் துறையிலே தான்-

எல்லாத்தையும் விட வெட்கக்கேடு-

கிராமத்துக்காரங்க அத்தனை பேரும் காலையிலே எழுந்திருச்சு வெளி வாசலுக்கும் போயிட்டுத் தெற்குத் துறையிலே வந்து கால் கழுவிக்கு வாங்க; மேற்குத் துறையிலே வந்து பல்லு விளக்கிட்டுப் போவாங்க.

ஆண் பிள்ளைகள விடிஞ்சு செய்யற இந்தக் காரியத்தை, கிராமத்துப் பெண்கள் விடியறதுக்கு முன்னியே முடிச்சுப்பாங்க.

'தாயைப் பிழைச்சாலும் தண்ணியைப் பிழைக்கலாகாதுன்னு, நீரின் பெருமையைப்பற்றியும், சுகாதாரத்தைப் பற்றியும் அண்ணன் சொன்னப்போ எனக்கு இந்த ஏரி ஞாபகம்தான் வந்திச்சு.

தெற்கு, வடக்கு, மேற்குன்னு ஒவ்வொரு துறையிலேயும் ஒவ்வொரு பிரிவா ஒட்டுமொத்தமா அசுத்தப்படுத்திட்டு; ஒரு துறையிலேருந்து மட்டும் சுத்தமான தண்ணின்னு குடிக்க எடுத்துட்டுப் போறாங்க நோய்நொடி வராமல் என்ன செய்யும்?. கிராமத்து வைத்தியரை நெல்லும் பணமுமாக