பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

நோட்டம் விட்டு விட்டு, "ஆமாம்..., மாரியப்பனை எங்கே காணோம்?” என்று கேட்டான்.

பக்கத்திலிருந்த பழனிச்சாமி, பட்டென்று கூறினான். 'அவன் தங்கச்சி பாவாடையிலே நெருப்புப் பிடிச்சுக்கிட்டுது. காலெல்லாம் வெந்து போச்சு. டவுன் ஆஸ்பத்திரிக்கு வண்டிலே போயிருக்காங்க. மாரியப்பனும் கூடப் போயிருக்கான்.

பழனிச்சாமியின் இந்தச் செய்தியைக் கேட்ட பிறகு; அந்த மண்டபம் சிறிது நேரம் மெளனத்திலாழ்ந்திருந்தது. ஒருவர் முகத்தை ஒருவர் சோகமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அங்கு நிலவியிருந்த அமைதியை கலைத்துக் கொண்டு அக்கினிபுத்திரன் கூறினான்: "எல்லாம் சரியாகிவிடும். யாரும் கவலைப்படவேண்டாம்; ஆனால் யாருமே நெருப்புடன் விளையாடக் கூடாது. நெருப்பை உபயோகிக்கும்போது. கூடவே நெஞ்சில் கொஞ்சம் பயமும்; ஜாக்கிாதை உணர்வும் தவறாமல் இருக்கவேண்டும்.

ஒவ்வொரு வீட்டிலும் தினசரி அடுப்பு எரிகிறது; சமையல் நடக்கிறது. மின்சார வசதி இல்லாத இடங்களில் மண்ணெண்ணை விளக்கு எரிகிறது.