பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60


இந்தக் காலத்தில் நினைத்தமாத்திரத்தில்-ஒரு சாதாரண தீப்பெட்டியின் உதவியினால்கூட நெருப்பை உண்டாக்கி விட முடியும். ஆனால்-ஆதி நாளில் மனிதன் உணவு சமைக்கவும்; கடுங் குளிரிலிருந்து, கணப்பு மூட்டித் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் படாதபாடு பட்டான்.

வளமான காடுகளில் கோடைக் காலங்களில் மூங்கில்களில் கூடத் தீ மூண்டுவிடும். அப்படி முண்ட தீ-சுற்றிலுமுள்ள மரங்களுக்கெல்லாமே பரவி காட்டை அழித்து விட்டுத்தான் ஓயும்.

ஆதிமனிதன் இதை மனதிற் கொண்டுதான் கட்டையோடு கட்டையை ஊராய்த்தும்; கட்டையைக் கடைந்தும்; சிக்கி முக்கிக் கற்களை ஒன்றோடொன்று மோதியும்; சிறு தீப்பொறியைப் பெற்று; பெரு நெருப்பாக்கிக் கொண்டான்.

இந்த இரண்டு வழிகளில் தான் பலநூறு ஆண்டுகளாக மனிதன் நெருப்பைக் கண்டான்.

நெருப்பை உண்டாக்கியது பற்றி கி. மு. 4000-ம் ஆண்டு, எகிப்து வரலாற்றில் ஒரு குறிப்பு காணப்படுகிறது.

காட்டிலே மரங்கள் ஒன்றோடொன்று ஊராய்ந்து தீப்பற்றி எரியும். அந்தக் காட்டுத் தீமைக் கண்டு, விலங்குகளைப் போல ஆயிரக்