பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61

கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சி ஓடிக் கொண்டிருந்த மனிதன்; மெல்ல மெல்லத் தீயுடன் கூடிப் பழகத் தொடங்கி, தனக்கு உற்ற நண்பனாக்கிக் கொண்டான்.

அதனால்—பல நன்மைகளை அவன் படிப்படியாகத் தீயின் மூலம் அடைந்தான். ஆனாலும் "தீ" என்பதுஎன்ன என்பதுபற்றிய சிந்தனையும்; அதன் ரசாயன மாற்றங்கள் பற்றியும் சமீபகாலமாகத் தான் ஆராயத் துவங்கினான்.

பொருள்களில் அதிவேகமாக உண்டாகும் இரசாயன மாற்றமே தீ. இந்த இரசாயன மாற்றம் நேரும் போது வெப்பமும் வெளிச்சமும் உண்டாகிறது. இந்த ரசாயன மாற்றம் பல வகைகளில் உண்டாகி, அவறறின் மூலம் தீயும் வெப்பமும் வெளியாகின்றன. அதில் ஒருவகை பிராணவாயுவுக்கும், எரிபொருளுக்கும் இடையே உண்டாவதைத்தான் நாம் 'தீ', அல்லது 'நெருப்பு’, ‘அக்கினி' என்று கூறுகிறோம்.

தீயைப் பற்றி இன்னொரு முக்கியமான விஷயம். தீக்கு ஒரு தனியான உருவம் கிடையாது. அதனால் தனித்து இயங்கவும் முடியாது. ஏதாவது ஒரு பொருளிலிருந்து-அல்லது ஏதாவது ஒரு பொருளைச் சார்ந்தே தீ பிறக்க முடியும்.

தீ விடாமல் எரிந்து கொண்டிருக்க வேண்டுமானால், அதற்கு பஞ்சு, விறகு, வைக்கோல்,