பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64



தானாக நெருப்புப் பற்றிக் கொள்வதைத் தடுப்பதற்கு அதிகப் பணம் தேவைப்பட்டது. எனவே அந்த முறையில் செயற்பட முடியவில்லை.

காற்றுப்பட்டவுடன் பாஸ்பரஸ் பற்றிக்கொள்ளும் என்கிற உண்மை தெரிந்ததால்; 1780-ம் ஆண்டு பிரான்ஸில் பாஸ்பரஸ் மெழுகுவர்த்தி கண்டுபிடிக்கப்பட்டது. பாஸ்பரஸ்ஸை மெழுகு நூல், அல்லது பேப்பர் இவற்றின் நுனியில் தடவி ஒரு கண்ணாடிக் குழாயில் அடைக்கப்படும்.

அந்தக் குழாய் திறக்கப்பட்டுக் காற்றுப்பட்டவுடன் பாஸ்பரஸ் தடவிய மெழுகு நூல் அல்லது தாள் எரியத் துவங்கிவிடும். இப்படி பாஸ்பரஸ், சல்பர் ஆகியவற்றின் உதவியால் நெருப்பை உண்டு பண்ணும் பற்பல முறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

1827-ம் ஆண்டு ஆங்கில வேதியல் நிபுணராகிய "ஜான்வாக்கர்’ என்பவர் தீக்குச்சி மூலம் தீ உண்டாக்கும் முறையைக் கண்டுபிடித்தார்.

அந்த தீக்குச்சிகள் மூன்று அங்குல நீளமிருந்தன. அவற்றின் நுனியில் 'ஆண்டிமனி சல்பைட், 'பொட்டாசியம் குளோரேட்', அரபிக் கோந்து’ (Gum Arabic) “ஸ்டார்ச்” “Starch” ஆகியவை தடவப்பட்டிருந்தன. அவற்றில் ஏதாவது சிறிது உராய்ந்தாலும்; தீப்பொறி பறப்